தமிழர்களின் கலைநயமும் & அறிவியல் தொழில்நுட்பமும்

Mahabalipuram



தஞ்சாவூர் பெரிய கோவில்:

thanjavur periya kovil


ராஜ சோழன் கட்டிய எழில் மிகு கோவில் தஞ்சாவூர் பெரிய கோவில். கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் கட்டப்பட்டது. கோவில் கோபுர உயரம் - 60 மீட்டர் , 15 தளங்கள் கொண்டது. இதன் கடைக்கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கபட்டது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்ட கோவில்.

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோவிலின் உச்சியில் நிறுவி இருக்க முடியும். பாறையில் மேல் அழுத்தம் கொண்ட சோதனையை ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோவில் முழுவதும் ஒரே தன்மை கொண்ட எந்திர கற்களை கொண்டது.
யுனெஸ்கோ(UNESCO) அமைப்பு இதனை இந்திய வழி சின்னமாக அறிவித்தது.

கல்லணை:



     கிபி 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணை. கரிகால சோழனால் கட்டப்பட்ட 2000 ஆன்டுகள் பழமை வாய்ந்த அணையாகும்.கற்கள் மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டது. நொடிக்கு இரண்டு லட்சம் கன அடியில் பாயும் காவேரியை கட்டுப்படுத்த கட்டிய அணையாகும்.

களி மண்ணால் ஆன பாறைக்கு நடுவில் பசையை வைத்து நீரின் வேக தன்மையை கட்டுப்படுத்தி அணை எழுப்பினார்கள்.

கல்லணை - காவேரி ஆறு , வெண்ணாறு,புது ஆறு, கொல்லிடம் என நான்கு வழிகளில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பாசன காலங்களில்  காவேரி,வெண்ணாறு,புது ஆறு போன்ற பகுதிக்கு திறந்துவிடப்படும். வெள்ள களங்களில் கொல்லிடத்திற்கு திறந்துவிடப்படும்.

கரிகால சோழனை பெருமைப்படுத்தும் விதமாக மணிமண்டபம் அமைத்துள்ளனர்.

மாமல்லபுரம்:

mamallapuram sirpa kalai

         7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிற்ப கோவில். கடல் சீற்றத்திற்கு இடையே கடற்கரை ஓரமாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பாறை ஒன்றின் முகப்பை பட்டையாக  செதுக்கி உள்நோக்கி குடைந்தவாறு அமைத்ததால் தான் குடைவரை கோவில் என அழைக்கப்பட்டது.

உச்சி கோபுரம் 60 அடியில் அமைக்கப்பட்டது.
UNESCO மாமல்லபுரத்தை உலக பண்பாட்டு சின்னம் என அறிவித்தது.



சிற்பக்கலையில் வடிவமைத்த சிலைகள் வரலாற்றை கூறுவதால் இந்த இடத்தை பார்க்க உலகம் முழுவதும் பார்வையாளர்கள் வருகின்றனர்.

கலங்கரை விளக்கம் உச்சியில் இருந்து சிற்பங்களும், பாறைகளும், கடலின் அலை அழகை ரசிக்க பல கண்கள் தேவைப்படும்.

பல மணிமண்டபங்கள்  மற்றும் பஞ்சபாண்டவ ரதங்கள்  மேலும் சிறப்பு .

புடைப்பு சிற்பங்களில் பல விலங்குகளும், கடவுள் சிலைகளும், வரலாறு சொல்லும் சிறப்ங்களும் வெளிப்புற புடைத்துள்ளனர்.

மிகப்பெரிய ஒத்த பாறை 12 மீட்டர் உயரம் கொண்டது. இன்றும் ஒரு சிறிய புள்ளி அளவு தரை தளத்தில் ஒட்டி கொண்டுள்ளது. இன்று வரை உருண்டதில்லை. அதை பல பேர் சேர்ந்தும் அசைக்க கூட முடியவில்லை என்பதே ஆச்சிரியமாகும்.


Comments