நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம்

நெடுவாசல் எனும் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோழ மன்னன் ஆண்ட எழில் மிகு தோற்றம் அளித்த புண்ணிய  விவசாய பூமீ. இப்போது நமது அரசால் ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்களால் சுடுகாடு போல் காட்சி அளிக்கறது.

துவக்கம்:


         ONGC நிறுவனம் 2007-ம் ஆண்டு நெடுவாசல் அருகில் அமைந்திருக்கும் நல்லாண்டார்  கொள்ளை எனும் கிராமத்தில் ஒரு குழாய் அமைத்து சோதனை நடத்தினர். கிராம மக்களிடம் ONGC நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்க்காக அமைத்த குழாய் என்றனர். 2007- ம் ஆண்டு அந்த நிறுவனம் பல்வேறு சோதனைகளை அங்கு நிகழ்த்தி இருந்தனர். எந்த விழுப்புணர்வும் இல்லாத கிராம மக்கள் அவர்கள் செய்வது நன்மைக்காகவே என்று நினைத்தனர்.


                        


கழிவு பகுதி:


சோதனைகளின் பொழுது நிலத்தில் வந்த அந்த கழிவுகளை குழாயின் அருகில் தொட்டி அமைத்து கொட்டி வைத்தனர். 10-த்து ஆண்டுகள் கழிந்தும் அந்த கழிவுகள் மக்கி போகாமல் அந்த தொட்டியில் இருக்கிறது மற்றும் இயற்கை சூழலை வீணாக்கிவிட்டது.






நிலத்தின் உரிமையாளர் குரல் :


 நிலத்தில் இருந்து எண்ணெய் மற்றும் GAS எடுப்பதாக சொல்லி குத்தகை விடுமாறு கேட்டனர்.இவ்வாறு செய்வதால் நிலத்தின் தன்மை கெட்டு விடாது மறுசூழலில் விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து தருமாறு ONGC நிறுவனம் கேட்டுகொணட்து. அந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றல் நிலத்தை கையக படுத்துவோம் என்று அந்த கிராமத்தின் VAO கூறியதாக சொல்கின்றனர்.







                                                                                                                                                                                                                                         அதிகார வர்க்கத்தின் வெறி செயல் & விளைவுகள்:
 திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளிக்கோட்டை -2 என்கிற கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவன் (பெயர் : சேதுபதி ). அந்த வழியாக சென்ற பொழுது கழிவு கிடக்கும் தொட்டியை எட்டி பார்த்து தவறுதலாக விழுந்து விடுகின்றான். அவன் முகம் முழுவதும் ACID அடித்தது போல் பொசிங்கி விடுகிறது.பின்னர் நாளடைவில் அதன் தாக்கம் உடல் முழுவதும் பரவி பொசிங்கி காணப்படுகிறது. நாளடைவில் அவன் பல தோல் நோய்களாளல் அவதிப்பட்டு கிராமத்தை விட்டு போனதாக உள்ளிக்கோட்டை கிராம மக்கள் பலர் கூறினர். அந்த கிராம மக்கள் பலரும் கூறுவது ONGC நிறுவனம் அந்த மாணவனை கொன்றோ அல்லது மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த மாணவனின் பெற்றோர் சரியான தகவல்கள் கூறவில்லை. அவர்களை பயமுறுத்தி இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

இந்தியா அல்லாது மற்ற நாடுகளில் நடந்த கோர சம்பவம்:

  பணம் மற்றும் படை வலிமை மிகுந்த அமெரிக்கா எனும் நாட்டில் Richard Nixon ஆட்சி காலத்தில் 1970-ல் Clean Air Act எனும் சட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டமானது காற்று மண்டலத்தை யாரும் மாசு படுத்த கூடாது என்பதாகும்.1972 - ல் Clean Water Act, 1974 - ல் safety drinking water act போன்ற பல திட்டங்கள் மூலமாக காற்றை யாரும் மாசு படுத்த கூடாது என்று அறிவிக்கபட்டது. இதை அனைத்தையும் சீரழிக்கும் விதமாக 2005-ல் ஆட்சி அமைத்த George W. Bush (Energy policy act 2005) எனும் திட்டத்தில் கையெழுத்து இடுகிறார். இந்த திட்டமானது மின்சாரம் எடுப்பதற்காக நாட்டின் இயற்கை வளங்களை எவ்வாறு வேண்டும்மென்றும் உபயோகிக்கலாம் எனப்பட்டது. இதன் விளைவாக மீத்தேன் எடுப்பதற்காக பல முன்னணி நிறுவனங்கள் (Encana, cabot oil & gas corporation, Williams) சேர்ந்து  அமெரிக்காவில் 34 மாநிலங்களில் 4,50,000-க்கும் மேலாக கிணறுகள் போடப்பட்டு மீத்தேன் எடுத்தனர். ஒரு கிணறு விகிதமாக 18 முறை மீத்தேன் எடுத்தனர். ஒரு முறை மீத்தேன் எடுப்பதற்கு 1.7 மில்லியன் கேலன் (gallons) அளவு நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. இவ்வாறு 4,50,000 கிண்றுகளில் இருந்து மீத்தேன் எடுப்பதற்கு (1.7 மில்லியன் கேலன் * 18 * 4,50,000) நிலத்தடி நீர் சுரண்டப்பட்டது. இவ்வாறு  செய்ததால் எஞ்சி உள்ள நிலத்தடி நீரில் மீத்தேன் உள்ளடக்கம் இருப்பதாக ஆய்வின் அடிப்படையில் தெரிவித்தனர். இந்த நீரை பருகிய விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்ததாக மருத்துவ ஆய்வின் அடிப்படையில் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் காரணமாக அமெரிக்கா பெரும் பேரழிவை சந்தித்து என்பது வரலாறு.

நெடுவாசல் செயல் திட்டம் சான்றிதழ் கூறு

 15th Feb 2017 - ல் (cabinet committee on economic affairs) CCEA கமிட்டி 31 இடத்தில் ஹைட்ரொகார்போன் (hydrocarbon) எடுக்க போவதாக அறிவித்தனர். 22 நிறுவனத்திடம் குத்தகை (lease) விட்டனர். இதில் 15வது இடத்தில் நெடுவாசலும் 16வது இடத்தில் காரைக்கால் உள்ளது. நெடுவாசல் ஹைட்ரொகார்போன் திட்டத்தை செயல்படுத்த GEM laboratories private limited நிறுவனதிற்கு குத்தகை விடப்பட்டது. இந்த GEM நிறுவனதின் உரிமையாளர் prasannakumar maligaarjuna gowdara. இவர் முன்னால் பாரதிய ஜனதா (BJP) மாநிலங்களைவை உறுப்பினர். இந்த மீத்தேன் எடுப்பதற்கு முன் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனம் GEM laboratories.



                                            
ONGC குழாய் கசிவு (pipeline Leaks)

             இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ONGC நிறுவனம் நெடுவசாலில் போட பட்டுயிருந்த குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டு அதை சரி செய்தனர். அந்த தருணத்தில் தான் நம்மில் பல பேருக்கு இந்த  திட்டம் பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால்  சுமார் 1991-ல் இருந்து நெடுவாசலை ONGC  நிறுவனம் ஒரு ஆய்வு கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அதிகம் திறமைவாய்ந்த அரசு நிறுவனமான ONGC மீத்தேன் திட்டத்தில் சரியாக செய்யாத பொழுது எந்த ஒரு முன் அனுபவம் இல்லாத GEM laboratories இந்த திட்டத்தை கையில் கொடுத்து இருப்பது ஆச்சிரயத்தை அளிக்கிறது. 


நிலத்தில் இயற்கை எரிவாயு:

1991-ம் ஆண்டு போடப்பட்ட குழாயில் இருந்து கடந்த இரண்டு ஆண்டு களாகவே எண்ணெய் கசிவு வெளிவந்து கொண்டு இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த கசிவுகள் விளைநிலங்களில் கலந்து பயிர்களை சேதம் விளைவித்தது.கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு கொப்பளித்து காணப்பட்டது மேலும் மண் வளம் முற்றிலும் அழிந்தது.




                                                                                                                                  Ministry of petroleum and natural gas:

இந்த அமைச்சகத்தில் இருந்து  ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் 2வது குறிப்பில் நிலத்திற்கு கீழ் இருக்கும் gas , மீத்தேன் எதை வேண்டுமென்றாலும் எடுப்பதற்கு உரிமம் வழங்கியது(Petroleum & Natural Gas). 9வது குறிப்பில் (Exploration period will be 8 years for on land and shallow water blocks)  மீத்தேன் எடுப்பதற்கு சுமார் 8 ஆண்டுகள் அனுமதிக்கபடுகிறார்கள் என்பது ஆனால் 1991-ல் போடப்பட்ட குழாய், 2007-ல் போடப்பட்ட குழாய் இன்று வரை அகற்றவில்லை.16வது குறிப்பில் (site restoration) ஒரு இடத்தில் மீத்தேன் எடுத்துவிட்டால்  அந்த இடத்தை விவசாயத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது என்று சான்றிதழ் கூறுகிறது. இதை இதுவரை ONGC நிறுவனம் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்பது சோகத்தை அளிக்கிறது.


United nation  G.O passed against methane:

     தஞ்சாவூர், மன்னார்குடி மற்றும் திருவாரூர் போன்ற பகுதிகளில் மீத்தேன் திட்டம் எடுப்பதற்கு அரசாங்கம் முடிவு பண்ணப்பட்ட பொழுது united nation (UNO) இங்கு ஆராய்ச்சி செய்து மீத்தேன் திட்டத்தை அரசு கொண்டுவந்தால் பூமிக்கு அடியில் இருக்கும் tectonic plates-களை இடையூறு செய்து பூகம்பம் வரும் என எச்சரித்தது.ஆனால் நமது அரசாங்கம் தொடர்ந்து பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

production of coal bed methane(CBM):

  

  16வது லோக்சபா கூட்டத்தில் CBM தனது 14th report கொண்டு வந்தது. இதில் UNFCCC(United Nations Framework Convention on Climate Change) அமைப்பு நடத்திய ஆய்வில் மீத்தேன் எடுக்கும் பொழுது  21 மடங்கு C2O அதிக global warming விளைவு தரக்கூடியது என்று கூறினர்.






 Door to hell:

      1978-ம் ஆண்டு துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) நாடு மீத்தேன் திட்டம் செய்த பொழுது ஒரு விபத்தில் மண்ணுக்குள் புதைந்தது. அப்போது ஏற்பட்ட பள்ளத்தாக்கை அந்த அரசு தீ வைத்து எரித்தனர். அந்த தீ 40 ஆண்டுகளாக இன்றும் கொழுந்து விட்டு எரிகின்றது. இது அந்த நாட்டின் கனிம வளம் மற்றும் இயற்கை பேரழிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் எண்ணெய் கழிவுகள் -எண்ணூர்:

       நாம் அனைவரும் அறிந்த ஒன்று  கடலில் எண்ணெய் கழிவுகள் கலந்து எண்ணூர் துறைமுகத்தை முற்றுகையிட்டது. கடலுக்கு நடுவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் கசிவு ஏற்பட்டு அது கடலில் கலந்தது. இதனால் கடல் வளம் மற்றும் கடல்வாழ் உயிரணங்கள் உயிரிழப்பு என பல நிகழ்வுகள் நிகழ்ந்தது.

போராட்டம்:

       கடந்த சில மாதங்களாகவே நம் மக்கள் போராட்ட களத்தில் நின்று போராடி கொண்டு இருக்கின்றனர். எந்த ஒரு ஊடக நிறுவனங்களும் துனிச்சலாக படம் பிடிக்கவில்லை. இன்றும் நம்மில் பல பேர் அங்கே போராடி வருகின்றனர். அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு வெளியேற வற்புறுத்தி வருகின்றனர்.100 நாட்களை கடந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பல இளைஞர்கள் அங்கே போராடி வருகின்றனர்.


முடிவு:

   நாம் ஒன்று இணைந்து நம் விவசாயத்தை காப்போம் என்று உறுதி எடுப்போம்.
   நம்மால் ஜல்லிக்கட்டு காப்பற்றபட்டது. வா தமிழா நாம் எட்டும் தூரம் வெகு தூரமில்லை.
 "வெள்ளையனை வெளியேற்றிய நம்மால் இந்த வெள்ளை ஆடை அரசியல்வாதியை வெளியேற்ற முடியாதா"
                                              
                                                                 இனி ஒரு விதி செய்வோம்.


                            இப்படிக்கு உங்கள் தமிழன் (மணிகண்டன்).

கதிராமங்கலம் மீத்தேன் திட்டம் பற்றி அறிய கீழ்காணும் link -ஐ click செய்யவும்.

https://maraikapattaunmaikal.blogspot.in/p/upcoming-events.html

Comments

Post a Comment