![]() |
Blue whale online challenge |
Blue Whale History:(நீல திமிங்கலம்):
Blue whale game ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரணத்தை தூண்ட கூடிய விளையாட்டு (Suicide Challenge) .
இந்த விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த Philipp Budeikin என்ற நபரால் 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு குறிப்பாக 17 வயதிற்கு உட்பட்டவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக இருந்ததால் ரஷ்யா அரசு இவரை கைது செய்தது. யாரோ ஒருவரால் 2016ம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் பரவ ஆரம்பித்தது. இந்த விளையாட்டின் மூலமாக பல நாடுகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
17 வயது ரஷ்ய சிறுமி இயக்கிய blue whale:
இந்த சிறுமி முதலில் விளையாட ஆரம்பித்து பல Task-யை முடித்து கடைசியாக தற்கொலை செய்யும் Task-யை செய்யாமல் அந்த விளையாட்டின் ADMIN ஆக செயல்பட்டு பல பேர்களுக்கு டாஸ்க் கொடுத்து வந்தார். இவர் மூலமாக இந்தியாவிலும் இந்த விளையாட்டு பரவியது. cyber crime மற்றும் தொழில் நுட்பம் மூலமாக அந்த சிறுமியை 2017-ல் ரஷ்யா அரசு கைது செய்த்து.
இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி:
இது ஒரு இணையம் வழியாக விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டு சாதாரணமாக play store ல் கிடைப்பதில்லை. இந்த விளயாட்டின் admin அல்லது ஏற்கனவே விளையாடி கொண்டிருப்பவர்களால் மட்டுமே request கொடுத்து பதிவு இரக்கம் செய்ய முடியும். இந்த விளையாட்டை துவங்கும் பொழுது நம்மை பற்றிய சில தகவல்களை கொடுத்த பிறகு மட்டுமே அடுத்த அடுத்த task யை செய்ய முடியும்.
இதற்கு பலியான நாடுகள்:
Argentina,Brazil,Bulgaria,Uruguay,United States,Turkey,Spain,Serbia,Chile,China,India,Italy,Saudi Arabia,Russia,Portugal,Pakistan,Kenya.
துவக்கம்:
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதுதான் ப்ளூவேல் எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு. இந்த விளையாட்டில் மொத்தம் 50 நிலை உள்ளன. இதை விளையாடத் தொடங்கியதும் நம் செல்போன், லேப்டாப்பில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. இதைத் தொடர்ந்து விளையாட்டினுள் உள்ளே செல்லும் மாணவர்களை கிட்டதட்ட விளையாட்டுக்கு அடிமையாக்கி கட்டளையை நிறைவேற்றும் அளவுக்கு தள்ளிவிடுகின்றனர்.
உடலை துன்புறுத்தும் விளையாட்டு:
உடலை கத்தியால் கிழித்து கொள்வது, கூர்மையான பொருள்களை கொண்டு கையில் ப்ளூவேல் வரைவது, நடுநிசியில் சுடுகாட்டுக்கு செல்வது, பேய் படம் பார்ப்பது, தண்டவாளத்தில் தனியாக நடந்துசெல்ல கூறுவது உள்ளிட்ட கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
மிரட்டல்:
ஒருவேளை இந்த கட்டளைகளை செய்ய மறுத்து விளையாட்டை பாதியில் முடித்து கொள்வதாக கூறினால் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களை வெளியே தெரிவித்து விடுவோம் என்று மிரட்டல்கள் வருகின்றன. இதற்கு பயந்து விளையாடி ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்தியாவில் blue whale ஊடுருவல்:
மும்பை மாநகரத்தில் உள்ள அந்தேரி சேர்ந்த Manpreet Singh எனும் 14 வயது சிறுவன் இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்து 50 நிலைகள் விளையாடி வந்தான். ஒவ்வொரு நிலையிலும் தன் உடம்பை வருத்திக்கொண்டு நிழற் படங்களை பதிவேற்றம் செய்து வந்தான்.கடைசியாக 50 வது நிலையில் தற்கொலை செய்து கொள்ளுமாறு கூறியதால் தன் வீட்டின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
இதன் பிறகு கேரளாவில் 2 மாணவர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தன் உயிரை விட்டனர்.
மதுரையில் விக்னேஷ் உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இந்த விளையாட்டு பரவி சென்னை,திருச்சி ,மதுரை,கோவை இடங்களில் விளையாடி வந்தனர். மதுரையை சேர்ந்த விக்னேஷ் எனும் கல்லூரி மாணவன் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்த பிறகு தனிமையாக இருந்ததாக நண்பர்களும் பெற்றோர்களும் கூறினர். பாதி நிலையை கடந்த விக்னேஷ் இதை பற்றி பெற்றோரிடம் கூறினான். பின்னர் சில நாட்கள் கழித்து மறுபடியும் இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்து கடைசி நிலையில் கூறியபடி தற்கொலை செய்து கொண்டான்.
தமிழகத்தில் ப்ளூவேல் ஊடுருவல்:
1) மதுரை மாவட்டத்தில் விக்னேஷ் உயிரிழப்பு.
2) புதுச்சேரியில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
3) கரூர் மாவட்டம் நடையனூரில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ப்ளுவேல் விளையாடி அதன் கட்டளைக்கு பயந்து போலீஸிடம் தெரிவித்ததால் அவர் மீட்கப்பட்டார்.
4) திருச்சி துறையூரில் நாகலாதபுரத்தில் ப்ளூவேல் விளையாடிய அபிஷேக் என்ற மாணவர் மண்டை உடைத்து கொண்டபோது மீட்கப்பட்டார்.
5) விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது.
விழிப்புணர்வு:
விக்னேஷ் உயிர் இழப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதும் இதை பற்றிய விழிப்புணர்வு நடத்தினார்கள். மேலும் இந்த விளையாட்டிற்கு அடிமை ஆனவர்களை அரசு கண்டித்து வருகின்றது.
எப்படி தடுக்க வேண்டும்:
மேலும் செல்போனில் ப்ளூவேல் டவுன்லோடு செய்திருந்தாலும் அதுகுறித்து விவசாய பெற்றோர், கூலி தொழிலாளிகள் ஆகியோர் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கிராமப்புற மக்களின் நலன் கருதி அரசு அதிகாரியோ, போலீஸ்காரரோ மாணவர்கள், இளைஞர்களின் செல்போன்களை வாரம் ஒரு முறை சோதனை செய்யும் நடைமுறை கொண்டு வரவேண்டும். இதனால் மாணவர்கள் உயிரிழப்பை தடுக்கலாம். பொது இடங்களில் விழிப்புணர்வு விளம்பரங்களை வைத்தல், பள்ளிகளில் குறும்படம் போட்டு காண்பித்தல் உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது.
Comments
Post a Comment