கருணாநிதியின் தற்போதைய நிலை(Is Karunanidhi dead)

Karunanidhi


கருணாநிதி ஆரம்ப காலம்:

           தக்ஷிணாமூர்த்தி  அவரது இயற்பெயர் , நாகப்பட்டினத்தில் உள்ள திருக்குவளை எனும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்தவர். பள்ளி பருவத்தில் இருந்து அவர்க்கு நாடகம் , கவிதை,கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.


முரசொலி பத்திரிக்கை &  மாநில மாணவர் கழகம்:
 

                     முரசொலி பத்திரிக்கை கருணாநிதியால் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தனது 12வது வயதில் மாணவன் நேசன் எனும் துண்டு பத்திரிகை ஆரம்பித்து இவருடைய சமூக புரட்சி மற்றும் செந்தமிழ் எழுத்துக்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் முரசொலியாக உருவெடுத்தது.  நாளடைவில் திராவிட மற்றும் அரசியல் கருத்துக்கள் மூலமாக பல மக்களால் தினம்தோறும் படிக்கும் நாளிதழாக உருவெடுத்தது இந்த முரசொலி. தனது இளம் பருவத்தில் இருந்து இளைஞர் மறு மலர்ச்சி திட்டத்தை உருவாக்கினார் பின்னர் மாநில மாணவர் கழகமாக உருவெடுத்தது.


சினிமா துறையில் கலைஞர்:


       
  A.S.A. சாமி அவர்களால் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார் கருணாநிதி. தனது முதல் படமான ராஜகுமாரி, அபிமன்யு ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். அடுக்கு மொழி வசனம், அழகிய வார்த்தை கோர்வு, அரசியல் எழுச்சி ஊட்டும் வசனங்கள் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈற்றார். அதற்கு பிறகு 1952ல் வெளியான பராசக்தி படம் மூலமாக மொத்த தமிழ் திரை உலகை திரும்பி  பார்க்கவைத்தார். இவருடைய வசனங்களில் பேசி நடித்த சிவாஜி கணேசன் அதற்கு பிறகு இந்திய திரை உலகின் புகழ் உச்சிக்கு சென்றடைந்தார். கலைஞரின் திரைக்கதை மற்றும் வசனங்களில் வெளியான மனோகரா படம் பெரிதும் பேசப்பட்டது. அதற்கு பிறகு பல படங்களுக்கு கதை, வசனம், பாடல்,திரைக்கதை செய்தார்.


கருணாநிதியின் குடும்ப வாழ்க்கை:


       
                    அஞ்சுகம் மற்றும் முத்துவேலர் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் கருணாநிதி. முரசொலி மாறன் அவருடைய அக்கா பையன். பத்மாவதி, தயாளு,ராஜாத்தி இவருடைய மனைவிகளாகும். மு.க முத்து , மு.க.அழகிரி,  செல்வி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி இவருடைய பிள்ளைகள். குடும்ப அரசியல் தலை தூக்கி நின்றது. தகவல் தொழில் நுட்பத்திற்கு முரசொலி மாறன் மகன்கள் கலாநிதி,தயாநிதி மாறன்களால் நிறுவப்பட்டது SUN டிவி தொலைக்காட்சி.

ஊழல்:


ஸ்பெக்ட்ரம், மஸ்டர்ரோல், சர்க்கரை பேரம் , பாமாயில் இறக்குமதி, வீராணம் குழாய் , பூச்சி மருந்து , BSNL , உர பேரம் என எல்லாவற்றிலும் ஊழல் செய்து ஒரு சிறிய வீடடில் இருந்த கருணாநிதி இப்பொழுது பல ஆயிரம் கோடி சொத்துக்களுடன் குடும்ப அரசியல் செய்து வருகிறார்.



கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:









   

1957  -   குளித்தலை , 1962 - தஞ்சாவூர் , 1967&1971 - சைதாப்பேட்டை,  1977&1980 - அண்ணா நகர் ,        1989&1991 - ஹார்பர் , 1996 & 2001&2006 - சேப்பாக்கம் , 2011&2016 - திருவாரூர்.



5 முறை முதலமைச்சர்:

                 அண்ணாவின் மறைவிற்கு பின்னர் 1969 - ல் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

1) 10 February 1969 - 5 January 1971    
2) 15 March 1971       - 31 January 1976
3) 27 January 1989   - 30 January 1991
4) 13 May 1996       - 14 May 2001
5) 13 May 2006       - 14 May 2011

1977 & 1991 குடியரசு ஆட்சி:

     1977ல்  ஊழல் காரணமாக இந்திராகாந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டது.
     1991ல்  தேச விரோத குற்றத்திற்காக குடியரசு தலைவர் சந்திரசேகரால் கைது செய்யப்பட்டார்.


கருணாநிதி நள்ளிரவில் கைது:




       Jun 30 2001 அன்று இரவு 1:45 மணியளவில் அப்போது ஆட்சி புரிந்த ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டார். 'flyover scam' மேம்பாலம் கட்டும் பணியில் 12 கோடி ரூபாய்  ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.  july 10 2001 வரை கைது செய்து வைத்தனர்.











காங்கிரஸ் வீழ்ந்து திமுக கை ஓங்கியது:

          அந்த காலத்தில் கொடி கட்டி பரந்த காங்கிரஸ் ஆட்சி. தனித்து போட்டியிட்டு அணைத்து தொகுதிகளிலும் வெற்றியை நாட்டி வந்தது காங்கிரஸ். அண்ணா அதற்கு வியூகம் வகித்தார். அப்போது இருந்த அனைத்து எதிர் கட்சிகளையும் கூட்டி கூட்டணி பேசினார். ராஜாஜியின் சுதந்திர கட்சி, ம.பொ.சி யின் தமிழரசு கழகம், முஸ்லீம் லீக், மார்சிஸ் கம்யூனிஸ்ட், நேதாஜி யின் forward bloc, ஆதித்தனாரின் நாம் தமிழர் போன்ற அனைத்து கட்சிகளை  கூட்டணி வைத்தார். இதனை கூட்டணி இல்லை கூட்டுறவு என்றார், 1957 - ல் திமுக 15 தொகுதிகளும் , 1962-ல் 50 தொகுதிகளிலும் பின்னர் கூட்டணி வைத்து 1967-ல் மார்ச் 6ம் தேதி அண்ணா முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் & மாநாடு:




                1951-ல் திமுக முதல் மாநாடு - சென்னை , 1956-ல் 2வது மாநாடு - திருச்சி. 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் அதில் கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.









இறந்ததாக பரவிய வதந்தி:



      இதற்கு முன்பு 2 முறை கலைஞர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இன்று (27-09-2017)  அவர் இறந்து விட்டதாக வந்த செய்தி வதந்தி. அவர் சிறு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்பொழுது நலமாக இருக்கிறார் என்றும் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் T.R Baalu கேட்டுக்கொண்டார்.




Comments