துவக்கம்:
காவேரி ஆறு முத்தமிட்டு செல்லும் டெல்டா மாவட்டம் தஞ்சாவூர்
பகுதியில் அமைந்துள்ளது கதிராமங்கலம் எனும் கிராமம். அரசாங்கத்தின் இந்த மீத்தேன் திட்டத்தால் பிற்காலத்தில் இந்திய வரைபடத்தில் இருந்து இந்த கிராமம் காணாமல் போனாலும் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை என்பதே உண்மையாகும்.
நிலத்தடி நீர் மஞ்சள் நிறம்:
கதிராமங்கலத்தில் விதைக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆனது நிறம் மாறப்பட்டு மஞ்சள் நிறத்தில் வருகின்றது என்பது ஊர் மக்களின் கூக்குரல்.
2000-ம் முதல் 2017வரை 7 கிணறுகள்:
கடந்த 17 வருடங்களில் கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்தில் 7 எண்ணெய் கிணறுகளை ONGC நிறுவனம் விதைத்தது.
குண்டர் சட்டம்:
இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய நம் தோழி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இதை போல் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடிய திருமுருகன் காந்தி போன்ற சமூக ஆர்வலர்களை அரசாங்கம் கைது செய்தது.
தேச விரோதிகள் என்று பெயர் சூட்டினார்கள்:
சமூக ஆர்வலர் பியூஷ் மனிஷ் நம் விவசாய பூமிக்கு நடக்கும் இந்த அவலங்களை நம் மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தினார். அவரையும் அரசு கண்டடித்து.
சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி இந்த திட்டத்தை எதிர்த்து ஐநா வரை பேசபட்டார், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிறுவனம் 2016 -ல் Emergency response plan எனும் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் எதன் விளைவாக எண்ணெய் கசிவு ஏற்படுகின்றது என்று கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
1. SPILL FROM MAIN OIL STORAGE TANKS (எண்ணெய் சேமிப்பு தொட்டியில் இருந்து).
2. SPILL DUE TO LEAKAGE FROM OIL TRANSFER LINES(எண்ணெய் பரிமாற்றம் செய்யும் வழி தடங்கள்).
3. SPILLAGE FROM EQUIPMENT(உபகரணங்களில் இருந்து).
4. SPILLAGE WHILE UNLOADING OF TANKER/TRUCK( கொண்டு செல்லும் போக்குவரத்து வாகனங்களில் இருந்து).
இவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு எண்ணெய் பொறிகலன்(Oil trap) அமைக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு பொறிகலன் கூட கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் அமல்படுத்தவில்லை என்பதே நிலவரம்.
Act 1989 and its amended rules 2003:
எந்த நிலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளை நிலத்தின் மண் வளம் பாதிக்கப்படுகிறதோ அந்த மண்ணை முற்றிலுமாக நிலத்திற்கு ஏற்றவாறு மண்ணை மாற்றி அமைக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது (Hazardous chemicals soaked soil should be handled as per Hazardous chemicals and waste management).
நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு:
10-ஆண்டிற்கு முன்னதாக எண்ணெய் கசிவு ஏற்பட்டு அதில் அருகில் பற்றி எறிந்த தீ துகள்கள் பட்டு விளை நிலமானது நாசமானது. இதை சரிக்கட்டும் விதமாக ONGC நிறுவனம் நில உரிமை யாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவர்களை சரிக்கட்டினர்.
Environmental impact assessment:
ஜூலை 2013, தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகை போன்ற மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்காக ONGC நிறுவனம் இந்த சான்றிதழை பிறப்பித்தது.
இதில் அவர்கள் கூறியது இந்த பகுதியில் மீத்தேன் எடுத்தால் பின்வரும் விளைவுகள் ஏற்படும் என்று,
1) Sediments and soil quality (மண்வளம் பாதிப்பு)
2) Water quality (நீர்வளம் பாதிப்பு)
3) Biological environment (உயிரியல் தன்மை விளைவு)
4) Land construct issue (சமூக கட்டமமைப்பு பாதிப்பு).
Ministry of environment and forests:
G.S.R 546 சட்டத்தின் கீழ் மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்தால் தடுத்து விட முடியும் என்று ONGC நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்த சட்டத்தில் கிணறு அமைக்கும் போது எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.ஆனால் 10-ஆண்டுகள் கழித்து இப்போது குழாய் உடைந்த எண்ணெய் கசிவை எவ்வாறு தடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.
இந்தியாவில் மீத்தேன் திட்டம் அனுமதிக்கப்பட்ட இடங்கள்:
தமிழ்நாடு - 31
ஆந்திரா - 4
குஜராத் - 5
ராஜஸ்தான் - 2
டெல்லி - செயல்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் வெற்றிடங்களில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே மக்கள் வசிக்கும் மற்றும் விளை நிலங்களில் திட்டத்தை செயல்படுத்தி தமிழ்நாட்டின் மண்,கனிம வளத்தை சீரழிக்கிறது.
தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி:
இவ்வளவு விளைவுகள் விவசாய பூமிக்கு ஏற்படும் என தெரிந்தும் ONGC நிறுவனமானது தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டை கூறு போட்டு விற்றுள்ளது. இதில் உள் அடங்கியவை (Reliance, GEECL, Gem laboratories).
G.O passed by Jayalalitha:
2015-ம் ஆண்டு முதலமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதா GO ஒன்று கையெழுதிட்டார். அதில் மீத்தேன் , ஹைட்ரோகார்பன் போன்ற எந்த திட்டங்களை கொண்டுவந்தாலும் தமிழக அரசு Environmental clearance சான்றிதழ் கொடுக்கபடமாட்டாது என்று தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றி ONGC நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டில் எல்லா திட்டத்தையும் செயல்படுத்திவருகிறது.
போராட்டம்:
அனைத்து தமிழர்களும் கதிராமங்கலத்தின் அவல நிலை கண்டு சமூக வலை தளங்களில் பறை சாற்றிவருகின்றனர். நம்மில் பலர் அந்த கிராமத்தில் இன்றும் போராட்ட கொடி தூக்கிய வண்ணம் உள்ளனர். போராட்டம் நடந்த பொழுது அங்கு வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதியை கூட தமிழக அரசு தடுத்து வருகின்றது. இளையோர் , ஆண் ,பெண் என அனைத்து தரப்பு மக்களும் நமக்கு உணவு வழங்கும் ஏழை விவசாயிகாக போராட்டம் நடந்துகிறார்கள்.எந்த ஊடக வெளிச்சமும் இந்த அறப்போராட்டத்தில் படாமல் அரசாங்கம் ஊமை நாடகம் நடத்துகிறது.
முடிவு:
"கையில் எடுக்க வேண்டியது மீத்தேன் அல்ல
மெழுகுவர்த்தி-யை
காக்க வேண்டியது விளை நிலங்கள் மட்டும் அல்ல
விவசாயியையும்-தான்
போராடுவோம் வெற்றி காணும் வரை"
"செத்து விடுவோம் என்று எண்ணாதே தமிழா
சாதிப்போம் கைகள் ஒன்று கூடினால்"
இனி ஒரு விதி செய்வோம்
இப்படிக்கு உங்கள் தமிழன் (மணிகண்டன்)
Comments
Post a Comment