அனிதாவை கொன்ற NEET தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST)

   

Anitha Death

Dr.அனிதா:

            அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா மாணவி 12வது படிப்பில் 1176 மதிப்பெண் எடுத்து இருந்தார். (கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 200). மத்திய அரசின் NEET பாடத்தை தாய்வழி கல்வியாக பயிலாத தமிழக பெண் அனிதா-வால் 86 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது.

அனிதா தற்கொலை காரணம்:

       

    12வது மதிப்பெண் முறையில் நுழைவு தேர்வு நடைபெறாததால் அனிதாவால் அரசு ஒதிக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது (கட் ஆப் 196.75). லஞ்சம் கொடுத்து தனியார் கல்லூரியில் சேர்க்கும் அளவிற்கு வசதி இல்லை. தன்னுடைய கனவு நினைவாகாததால் தற்கொலை செய்து கொண்டார். மதிப்பெண் மற்றும் திறமை இருந்தும் சரியான தேர்வு முறை இல்லாததால் பல ஏழை மாணவ மாணவிகள் கல்லறையில் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

 

 


NEET:

 

       (National Eligibility cum Entrance Test). 2016-ஜூலை 24 - முதல் NEET என்ற பொது நுழைவு தேர்வு கட்டாய அமலாக்கப்பட்டது. (பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சல, பீகார், ஒடிசா, மணிப்பூர்,மத்திய பிரதேசம்) தமிழகம்  போன்ற பிற மாநிலங்கள் NEET தேர்வை ஒப்புக்கொள்ளவில்லை. தமிழகத்தில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 விழுக்காடு(%) அரசு ஒதிக்கீட்டை அரசே நிரப்பும் என்றும் 35 விழுக்காடு (%) நிர்வாக இடங்களுக்கு NEET நுழைவு தேர்வு மூலமாகவே நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது. 2017-ல் அதாவது நடப்பு ஆண்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு NEET பொது நுழைவு தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தேர்வை 7 மொழிகளில்(தமிழ், குஜராத்தி, ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, அசாம், ஆங்கிலம்) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளார்.

NEET Examination அவலம்

 

  • பெண்களின் ஆடைகள் அகற்றி சோதனை. 

  • அணிகலன்கள் அகற்றி சோதனை

  • செருப்புகளை அகற்ற சொன்னார்கள்.

  • ADMISSION CARD - இரு பக்கமும் நகல் எடுக்க கூடாது என்று நிராகரித்தனர்.

  • கருநிற ஆடை அனுமதிக்கவில்லை.

  • துப்பட்டாவை போட அனுமதிக்கவில்லை.

     

அரசியல் பிரமுகர்களின் கேவலமான விமர்சனம்:

         Dr. அனிதா தற்கொலையின் பின்னணியில் காதலவோ, கள்ளக் காதலவோ இருக்க கூடாத என்று கேவலமாக சொல்லி கொண்டு இருக்கின்றனர். 

மருத்துவ கல்விக்கான சேர்க்கை:

      1947-ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1986-87 வரை நேர்காணல் (Interview) மூலமாக சேர்க்கை நடைபெற்றது. 1987-ல் இருந்து 2007 வரை நுழைவு தேர்வு (Entrance) மூலமாக நடைபெற்றது. 2007-ல் இருந்து 2016 வரை +2 மதிப்பெண் -களை வைத்து மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. 2017-ல் இருந்து NEET  மூலமாக சேர்க்கை நடைபெற்றது.

MMR / IMR Ratio:

 

       இந்த விகிதாச்சாரம் பிரசவத்தின் பொழுது இறக்கக்கூடிய தாய் மற்றும் குழந்தையின் இறப்பை வைத்து எடுக்கப்படுகிறது. எந்த அளவிற்கு MMR /IMR குறைவாக இருக்கிறதோ அங்கே மருத்துவ  தரமானது மேலோங்கி இருக்கின்றது என அர்த்தம்.

     

 

 

  •      தமிழகம் - 1 லட்சம் பிரசவத்திற்கு 79 பேர் உயிரிழப்பு ஏற்படுகிறது.

  •      அசாம் - 300 , உத்திர பிரதேசம் - 280, மற்றும் வடமாநிலத்தில் 200.

ஆனால் மத்திய அரசு தமிழகத்தின் கல்வி தரம் உயர வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

வேப்பூர் ஒன்றியத்தின் மருத்துவ சாதனை:

     
 

  பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேப்பூர் ஒன்றியம். சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1996 வரை ஒரு மருத்துவர் கூட இந்த பகுதியில் இருந்து வரவில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளில் Entrance மூலமாக 1 மருத்துவர். 12வது மதிப்பெண்களை வைத்து மருத்துவ சேர்க்கையில் மூலமாக 16 மருத்துவர்கள் இந்த வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு வார்டில் இருந்து வந்து இருக்கிறார்கள். 

 

 

Coaching center for NEET:

         CBSE வழி பாடாத் திட்டத்தில் பயின்றவர்கள் 9ம் வகுப்பில் இருந்து NEET coaching பயிலுகிறார்கள். இதனால் 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றும் மத்திய வழி பாடத்திட்டத்தில் அமைந்த NEET  தேர்வை அவர்களால் வெற்றி காண முடிகிறது.இதறகு அவர்கள் 2 லட்சம் வரை செலவிட்டு பயிலுகிறார்கள்.

15% & 85%

    

 15 சதவிகிதம் All India கோட்டாவும் , 85 சதவிகிதம் மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

3 முறை NEET வாய்ப்பு:

       மாணவர்களுக்கு 3 முறை NEET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. ஒரு  வருடத்திற்கு ஒரு முறை வீதம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தமிழனுக்கு மருத்துவம் இல்லை:

       தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. NEET மூலமான இந்த மருத்துவ படிப்பு தமிழக மாநிலத்தை சேர்ந்த மாநில வழி கல்வி பயின்ற மாணவர்களால் சொந்த மாநிலத்தில் கல்வி பயில முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

ஆரம்ப கால மருத்துவ படிப்பு:

     1920 வரை சமஸ்கிரதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்ற முறை இருந்தது. ஆனால் இன்று இது மறை முகமாகவே நடந்து வருகிறது. பொருளாதார ரீதியாக மேலோங்கி  உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது மருத்துவம் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் CBSE பள்ளிகள் எண்ணிக்கை:

     

   2010 வரை 250 CBSE பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்கி வந்தது. ஆனால் இன்று 700 CBSE பள்ளிகள் இயங்கி வருகின்றது.

 

 

 போராட்டம்:

       சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டில் இருந்து NEET எதிர்த்து போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.தமிழ்நாட்டில் மாணவர்கள் அனிதா தற்கொலைக்கும் மற்றும் NEET  எதிர்த்து போராடி வருகின்றனர். தமிழக அரசு இதை நடக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டம் நடத்தினால் பள்ளியில் இருந்து நீக்குபடும் என்றும்,மதிப்பெண் சான்றிதழ் வழங்கபடாது என்றும் கூறிவருகின்றனர். 

முடிவு:

     வெற்றி காணும் வரை உறக்கமெல்லை. வீதியில் நிற்கும் நம் சகோதர சகோதிரிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NEET தேவையில்லை என்று சொல்லவில்லை பள்ளியில் பாடத்திட்டத்தில் NEET பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் தேர்வு வைத்தால் நல்லதே.

                  " விழித்திடு தமிழா 

                         வீதி வரை செல்வோம் 

                    மாநிலத்திற்கு அல்ல 

                        மத்தியில் ஒலிப்பதற்கு"

        

                                                           இனி ஒரு விதி செய்வோம்


     இப்படிக்கு உங்கள் தமிழன் மணிகண்டன்


 


 


 

 

 

Comments