மறைக்கப்பட்ட உண்மைகள் - தொகுப்பு -1

Maraikapatta Unmaikal

               இன்றைய தமிழகத்தில் நாம் பல விஷயங்களை மறக்கப்பட்டு வருகிறோம். இதற்கு காரணம் புதிய புதிய பிரச்சனைகள். ஒரு விஷயம் வலை தளங்களில் பெரிதாக பேசப்பட்டால் அதை மறக்க செய்ய பல புதிய பிரச்சனைகள் வருகின்றனர்.

3 கண்டைனர்-ல் 570 கோடி:

570 crore container


        திருப்பூர் அருகே 3 லாரிகளில் புடிபட்ட 570 கோடி SBI வங்கி தன்னுடையது என்றது. SBI மேலாளர் கூறியது இந்த தொகை கோயம்பத்தூரில் இருந்து திருப்பூர் வழியாக விசாகப்பட்டினத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. உரிய ஆவணங்களை ஓட்டுநர் கொடுக்கவில்லை. ஆனால் இந்த தொகையானது தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அரசு இதை அப்டியே மூடி மறைத்தது. இப்பொழுது இந்த வழக்கு உறங்கிக்கொண்டு இருக்கிறது.



ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்:

 
jayalalitha death

ஜெயலலிதா இறப்பில் பல வியூகங்கள் பேசப்பட்டது. அவருடைய கால் எடுக்கப்பட்டது, முகத்தில் இருந்த மூன்று புள்ளிகள். அவர்க்கு கொடுக்கப்பட்ட உணவு என பல்வேறு பேசப்பட்டது, அதற்கு இன்று வரை சரியான பதில் இல்லை. அடுத்த முதல்வர் எடப்பாடி,சசிகலா வழக்கு , அமைச்சர்கள் மாற்றம் ,
 EPS - OPS கூட்டணி, TTV.தினகரன்  என பல மாற்றங்கள் நடந்து விட்டது.



சேலம் ரயிலில் ஓட்டை - 5.75 கோடி:

   
salem train robbery
   
            சேலத்தில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸில் மூன்று  பெட்டிகளில் 342 கோடி RBI பணம் எடுத்து செல்லப்பட்டது. விருத்தாச்சலம் வரை டீசலில் இயக்கப்பட்டது. அதன் பிறகு மின் இணைப்பில் செயல் பட்டது. சென்னை வரும் வழியில் ரயிலின் மேற்குறையை உடைத்து 5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. இதை இன்று வரை யார் செய்தார்கள் என்று கண்டு பிடிக்கவில்லை.

 சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு:


sekar reddy case


    சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ கைது செய்தது. சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் சில நாட்களில் இருந்த தடமே தெரியாமல் போனது.


                 --  இது போன்று நம்மால் மறக்கப்பட்ட உண்மைகள் பல உள்ளது --



Comments