கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். பிழைப்பு தேடி கரூர் வந்தார். இன்று பல்லாயிரம் கோடிக்கு அதிபதி. வருமான வரி துறை ரெய்டில் 5 கோடி பிடிபட்டது. அதன் பிறகு அவரை பற்றிய செய்தி மிகப்பெரிய ஆச்சிரியத்தை கொடுத்தது. ADMK வந்த பிறகு அவருடைய வருமானம் பல மடங்கு பெருகியது.
1) திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்து புதிய RC புத்தகம் தயாரித்து விற்றது.
2) திருச்சி மற்றும் கோவையில் கல்வி நிறுவனங்களில் முதலீடு.
3) கர்நாடகாவில் நிலத்தில் முதலீடு.
4) தேர்தலில் பணம் பட்டுவாடா போன்ற பல துறைகளில் சொத்து தேடினார்.
ரெய்டில் மாற்றிய பிறகு சில நாட்கள் பேசப்பட்டது பின்னர் இந்த செய்தி காணாமல் போனது.
நத்தம் விஸ்வநாதன் வழக்கு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வேம்பார்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். முன்னாள் அதிமுக மின்துறை அமைச்சர். அவர் சொந்த ஊரில் வீடுகள் . தொழில் நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் போன்ற பல சொத்துக்கள் உள்ளன.ஆனால் வருமான வரி செலுத்துத்தால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விஸ்வநாதன் மகன் மற்றும் மகள் வீட்டில் சோதனை நடந்தது. கரூர் அன்புநாதன் இடம் கைப்பற்றப்பட்ட 5 கோடி விஸ்வநாதன் பணம் என தெரிய வந்தது. கணக்கில் வராமல் 65 லட்சம் பணம் ரெய்டில் பிடிபட்டது.
அடுத்த சில தினங்களில் ADMK -வில் இருந்து அவரை நீக்கினார்கள்.
விஜய பாஸ்கர் சொத்து வழக்கு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர். தற்பொழுது விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர். சுகாதார துறை அமைச்சராகவும் இருக்கிறார், சமீபத்தில் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டது. மருத்துவ துறையில் ஊழல் , சொத்து குவிப்பு, மருந்தில் கலப்படம்.
1) 100 ஏக்கரில் மதர்தெரசா கல்லூரி.
2) 900 ஏக்கரில் திருவேங்கை வாசலில் குவாரி.
3) கந்தர்வகோட்டையில் 500 ஏக்கர் நிலம்.
4) திண்டுக்கலில் 500 ஏக்கர் நிலம்.
5) ஊட்டி மற்றும் அன்னவாசலில் 400 ஏக்கர் நிலம்.
6) சென்னை மற்றும் பெங்களூரில் அடுக்கு மாடி கட்டிடம் மற்றும் பங்களா.
7) 5000 கோடியில் பாலிமர் டிவி நிறுவனம்.
8) பீகாரில் 2 மருத்துவ கல்லூரிகள்.
9) வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்கள்.
10)மருத்துவத்துறையில் பல ஊழல்.
ஆவின் பால் ஊழல்:
1981-ல் ஆவின் பால் கொள்முதல் தொடங்கப்பட்டது.5 லட்சம் லிட்டராக இருந்த கொள்முதல் தற்பொழுது 22 லட்சம் லிட்டராக உயர்வு. பால் பவுடர் மற்றும் வெண்ணெய் போன்றவையும் கொள்முதல் செய்யப்பட்டது.
1) பல ஆயிரம் கிராமங்களில் இருந்து பால் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ஆவின் அமைப்பிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
2) கிராமத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால் ஆவின் அமைப்பிற்கு சென்றவுடன் தண்ணீர் மற்றும் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்டு பாலின் புரத சத்து குறைகிறது.
3) 2011-ம் ஆண்டு சோழிங்க நல்லூர் ஆவின் பண்ணையில் நடந்த தீ விபத்தில் 1,44,000,00 ரூபாய் மதிப்பில் உள்ள பொருட்கள் நாசமாகின. இன்று வரை அதற்கு காரணம் தெரியப்படுத்த வில்லை.
4) கொண்டு செல்லும் பால் வண்டியில் இருந்து பால் பாக்கெட் திருடப்படுகிறது.
5) பால் வண்டி புறப்படும் பொழுது P.H அளவு பார்த்து அனுப்ப படுகிறது. ஆனால் வண்டி பண்ணைக்கு வரும் வழியில் பைப் வைத்து திருடப்பட்டு மீண்டும் சீல் வைத்து தண்ணீர் சேர்த்து கொண்டுவரப்படுகிறது. பண்ணையில் P.H அளவு சரி பார்ப்பதில்லை.
6) சரியான ஊதியம் மற்றும் வண்டிக்கு பழுது பார்க்க பணம் தராததால் பால் திருட்டில் ஈடுபட்டதாக ஓட்டுனர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
அரசு சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் எந்த ஒரு தவறும் நிகழாது.
Comments
Post a Comment